/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்வு
/
ரோட்டரி நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்வு
ADDED : ஜூலை 03, 2024 01:53 AM

கோவை;ரோட்டரி மாவட்ட புதிய கவர்னராக, கோவையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சுந்தரவடிவேலு பொறுப்பேற்றுக்கொண்டார். கோவை ஈச்சனாரி பகுதியில், செல்வம் மகால் அரங்கில் பதவி ஏற்பு நிகழ்வு நடந்தது.
நிகழ்வில், நீலகிரி மாவட்ட தோடர் இன மக்களுக்கு இலவச வீடு கட்டி தருதல், கவுசிகா நதி வழித்தடம் மீட்டெடுத்தல், சைபர் கிரைம் குறித்த இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு குறித்து, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், கேரளாவை சேர்ந்த முன்னாள் ரோட்டரி கவர்னர் விஜய குமார் உட்பட கோவை, கேரளா மாநிலத்தின் பாலக்காடு, திருச்சூர், கொச்சின், போன்ற முக்கிய நகரங்களில் உள்ள, ரோட்டரி கிளை சங்க நிர்வாகிகள் 176 பேர் இதில் பங்கேற்றனர்.