/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டரி மான்செஸ்டர் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
/
ரோட்டரி மான்செஸ்டர் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
ADDED : ஜூலை 01, 2024 01:24 AM

கோவை:கோவை ரோட்டரி கிளப் ஆப் மான்செஸ்ட்டரின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா, அவிநாசி ரோட்டில் உள்ள, கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் நேற்று இரவு நடந்தது.
சிறப்பு விருந்தினராக, ரோட்டரி மாவட்ட ஆளுனர் மாருதி, கவுரவ விருந்தினராக பாரதியார் பல்கலை பேராசிரியர் விமலா ஆகியோர் பங்கேற்றனர்.
கோவை ரோட்டரி கிளப் ஆப் மான்செஸ்டரின் புதிய தலைவராக ரகுராமன், புதிய செயலாளராக சுபசித்ரா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய தலைவர் ரகுராமன் கூறியதாவது:
கோவை ரோட்டரி மான்செஸ்டர் சங்கம் பல சமூக பணிகளை செய்துள்ளது. இந்த ஆண்டும் பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. 'ரைஸ் ரூல் ராக்' என்ற தீம் அடிப்படையில் பல சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துகிறோம். கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனையுடன் இணைந்து கேன்சர் நோய் சம்பந்தமான ஆறு திட்டங்கள், பழங்குடி மக்கள் வீடுகளுக்கு சோலார் விளக்கு வழங்குதல், மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து 6,000 பள்ளி மாணவர்களுக்கு பட்டம் இதழ் வழங்குதல், ஆறுகளை துார்வாரி சுற்றுச்சூழலை பாதுகாப்பது உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை ரோட்டரி கிளப் துணை ஆளுனர் கமல்குமார், டாக்டர் ரோகிணி சர்மா, ரோட்டரி நிர்வாகிகள் பிரதீப் கோபால், மகேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.