/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாட்டு சந்தையில் விற்பனை விறுவிறு
/
மாட்டு சந்தையில் விற்பனை விறுவிறு
ADDED : மே 01, 2024 12:24 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாட்டு சந்தையில், மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.
பொள்ளாச்சி மாட்டு சந்தை வாரந்தோறும், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. நேற்று வியாபாரம் விறுவிறுப்பாக நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மாட்டு வியாபாரிகள் கூறுகையில், 'நேற்று சந்தைக்கு, 3,500 மாடுகள் விற்பனைக்காக வந்தன. நாட்டு பசு மாடுகள், 35 -- 40 ஆயிரம் ரூபாய், எருமை, 45 -- 50, காங்கேயம் காளை, 55 -- 60, முரா, 55 -- 60, ஜெர்சி 25- - 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது,' என்றனர்.