தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரங்கே கவுடர் வீதியில் சுகாதார சீர்கேடு

ரங்கே கவுடர் வீதியில் சுகாதார சீர்கேடு

ரங்கே கவுடர் வீதியில் சுகாதார சீர்கேடு


ADDED : ஜூலை 26, 2026 09:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 09:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

1. கோயில் அருகில் குப்பை நியூ சித்தாபுதூர் வெங்கிடசாமி ரோட்டில் கோயில் முன் பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் குப்பையை கொட்டி, வேறு வண்டிகளுக்கு மாற்றப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

–சண்முகம்: 2. கழிப்பிடமாகும் நடைபாதை ராஜ வீதியில் ரங்கே கவுடர் வீதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து பகுதியில் உள்ள நடைபாதையை பலரும் கழிப்பிடமாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

–பிரேம்குமார்: 3. ரோடு மோசம் சரவணம்பட்டி, அம்மன் கோயில் வார்டு எண் 9, பெத்தேல் நகர் முதல் வீதியில் மழை நாட்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதால் மக்கள் நடந்து செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்.

–கீதா சீனிவாஸ்: 4. தெரு விளக்குகள் எரியவில்லை வடவள்ளி திருவள்ளுவர் நகர் 2வது வீதியில் ஓராண்டாக தெரு விளக்குகள் எரியவில்லை. இப்பகுதியில் உள்ள இரு விளக்குகள் எரியவில்லை. மின்வாரியத்துக்கு புகார் செய்தும் சரி செய்யவில்லை.

–ஆதித்யா: 5. அபாயக்குழி கோவை ரயில்வே ஸ்டேஷன் பின் பகுதியில் உள்ள கூட்ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த ரோட்டில் உள்ள குழியால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

–இஸ்மாயில்: 6. தேங்கும் கழிவுநீர் செல்வபுரம், சாஸ்தா நகரில் குடியிருப்புகள் நடுவே உள்ள சாக்கடை கால்வாயில் குப்பை அடைத்துள்ளதால், கழிவு நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.

–வேணுகோபால்: 7. குப்பைமேடான ரோடு வார்டு எண் 55, மகாத்மா காந்தி ரோட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் குப்பைமேடாக மாறி வருகிறது.

–ஞானராஜ்: 8. ஒளிரா விளக்கு கள்ளிமடை ராஜவீதியில் 61வது வார்டு மூன்று மாதமாக தெரு விளக்கு எரியவில்லை மின்வாரியத்தில் புகார் அளித்தும் பயனில்லை. இரவில் பெண்கள் வெளியில் செல்லவே அச்சமாக உள்ளது

–சிவா: 9. வாட்டர் லீக்கேஜ் குனியமுத்தூர் சுண்டாக்காமுத்தூர் ரோடு சிறுவாணி டேங்க்கின் பிரதான குழாய் சரியாக இணைக்கப்படாததால் பைப் லீக் ஆக துவங்கி பல மாதங்களாகி விட்டது. இன்னும் சரிசெய்யப்படவில்லை.

–முகமது சகாரியா: 10. ரோடு மோசம் மேட்டுப்பாளையம் ரோடு, விமன்ஸ் சென்டரில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் ரோடு மோசமாக சேதமடைந்துள்ளது. இதில் செல்லும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றன.

–ராமமூர்த்தி: 11. குப்பை அகற்றப்படுமா? போத்தனுார் ஜோதி நகர் 2வது வீதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து கொட்டப்படும் குப்பை ஒரு மாதமாக எடுக்கப்படாமல் உள்ளது.

–அமுதா: 12. தெருவிளக்கு சரிசெய்யப்படுமா? துடியலூர் சந்தை கடை ரோடு அரசு அரசு மருத்துவமனை அருகில் தெரு விளக்குகள் பல மாதங்களாக எரியவில்லை. இதனால், அவ்வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் கடக்க வேண்டியுள்ளது.

–பார்த்தசாரதி: 13. அப்புறப்படுத்தலாமே பீளமேடு பெருமாள் கோவில் பின்புறம் சாலையில் கட்டடக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

–கவுதம்: 14. வாகனங்களால் விபத்து நரசிம்மநாயக்கன்பாளையம், புதுப்பாளையம் செல்லும் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்துகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–சந்திரசேகரன்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us