/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்கு குறுமைய போட்டியில் சாவரா வித்யா பவன் 'சாம்பியன்'
/
மேற்கு குறுமைய போட்டியில் சாவரா வித்யா பவன் 'சாம்பியன்'
மேற்கு குறுமைய போட்டியில் சாவரா வித்யா பவன் 'சாம்பியன்'
மேற்கு குறுமைய போட்டியில் சாவரா வித்யா பவன் 'சாம்பியன்'
ADDED : செப் 03, 2024 11:21 PM

கோவை:மேற்கு குறுமைய தடகள போட்டிகளில் மாணவர், மாணவியர் பிரிவுகளில் சாவரா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி, ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' வென்றது.
பள்ளி கல்வித்துறை சார்பில், மேற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள் கடந்த ஜூலை முதல் நடத்தப்பட்டன. தொண்டாமுத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிகளில், 44 பள்ளிகளை சேர்ந்த, 2,000 மாணவ, மாணவியர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
குழு விளையாட்டு போட்டிகள், பாரதியார் பல்கலை மைதானத்தில் நான்கு நாட்கள் நடந்தன. தொடர்ந்து, கோவை நேரு ஸ்டேடியத்தில் இரு நாட்கள் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 100 மீ., ஓட்டத்தில், சாவரா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி மாணவர் சித்தீஸ் முதலிடம் பிடித்தார்.
800 மீ., மற்றும் 1500 மீ., ஓட்டத்தில், ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஷ் முதலிடம் பிடித்து, பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.
குண்டு எறிதலில் சாவரா பள்ளி அஜன்யா, ஈட்டி எறிதலில் ஈஷா பள்ளி மதுஸ்ரீ ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மாணவ, மாணவியர் என, இரு பிரிவுகளிலும் ஒட்டுமொத்த 'சாம்பியன்ஷிப்' பட்டத்தை, சாவரா வித்யா பவன் மெட்ரிக் பள்ளி பெற்றது.