ADDED : ஜூலை 13, 2024 08:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில், நேற்று மதியம் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தன. எனினும் அவை முற்றிலும் எரிந்து நாசமானது. நேற்று மாலை கோவை மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, மாவட்ட உதவி அலுவலர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், தீ விபத்து நடந்த இடத்திற்கு அருகே, மற்றொரு குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு, எந்த அனுமதியும் இல்லாமல் ஸ்டாக் வைத்திருப்பது தெரிய வந்தது. அந்த குடோனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். தலைமறைவான பட்டாசு உரிமையாளர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.