/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதை கிராம திட்டத்தில் மானியத்தில் விதை
/
விதை கிராம திட்டத்தில் மானியத்தில் விதை
ADDED : ஏப் 11, 2024 11:51 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வேளாண் துறை சார்பில், விதை கிராம திட்டத்தின் கீழ், விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவு விவசாயம் உள்ளது. தற்போது கிணத்துக்கடவு வேளாண் துறை சார்பில், விதை கிராம திட்டத்தின் கீழ், உயர் விளைச்சல் ரகங்களான தட்டை பயிறு, உளுந்து, சோளம் போன்ற விதைகள், 50 சதவீதம் மானியத்தில் கிடைக்கிறது. விதைகள் போதிய அளவு இருப்பு உள்ளதால் விவசாயிகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
விதை கிராம திட்டத்தில் ஆர்வம் உள்ள விவசாயிகள் விதைகளை பெற, சிட்டா மற்றும் ஆதார் கார்டு நகலை வேளாண் விரிவாக்க மையத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், தகவலுக்கு, கிணத்துக்கடவு வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.
இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.

