ADDED : ஏப் 03, 2024 10:50 PM

உடுமலை பகுதிகளில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் சோதனையில், ஒரு லட்சத்து, 96 ஆயிரத்து, 900 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி, உடுமலை சட்டசபை கூடுதல் பறக்கும் படை அலுவலர் நடராஜ் தலைமையிலான குழுவினர், சின்னவீரம்பட்டி பைபாஸ் ரோடு அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஆனைமலையை சேர்ந்த கண்ணன், தேர்தல் நடத்தை விதிமீறி, கொண்டு வந்த, 57 ஆயிரத்து, 200 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே போல், சிக்கனுாத்து சமுதாயக்கூடம் அருகே, நிலை கண்காணிப்பு குழு அலுவலர் சுந்தரம், போலீசார் கோவிந்தராஜ், சந்தானமாரி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பைக்கில், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த, லோகேஸ், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, உடுமலை தாசில்தார் சுந்தரத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
* பொள்ளாச்சி அருகே, வடக்கிப்பாளயைம் பிரிவில், நிலையான கண்காணிப்பு குழுவினர், அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். வாகனத்தில் வந்த மகாலிங்கபுரத்தை சேர்ந்த டினு என்பவர், முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த, ஒரு லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- நிருபர் குழு -

