/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாய்ப்பால் விற்பனையா... கோவையிலும் சோதனை
/
தாய்ப்பால் விற்பனையா... கோவையிலும் சோதனை
ADDED : ஜூன் 03, 2024 01:34 AM
கோவை;மருந்து கடையில் தாய்ப்பாலை விற்பனைசெய்த விவகாரத்தில், கோவையில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு மருந்து கடையில், தாய்ப்பாலை வாங்கி பதப்படுத்திபாட்டில்களில் அடைத்து, 30 மில்லி, 500 ரூபாய் என விற்பனை செய்துள் ளனர். தகவல் அறிந்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கடைக்கு 'சீல்' வைத்தனர். இதையடுத்து, கோவை உட்பட மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த, உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறுகையில், “கடைகளில் வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி, தாய்ப்பால் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை, 94440 42322 என்ற உணவு கட்டுப்பாட்டு துறையின் வாட்ஸ்ஆப் எண்ணிலும், 0422 2220922 மற்றும் 93616 38703 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்,” என்றார்.