/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவில் ஆண்டு விழா
/
சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவில் ஆண்டு விழா
ADDED : மார் 11, 2025 05:06 AM

சூலுார் : சூலுார் சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவில் ஆண்டு விழா பக்தி பரவசத்துடன் கெண்டாடப்பட்டது.
சூலுார் திருச்சி ரோட்டில் உள்ள சக்தி பஞ்சாட்சரி ஸ்ரீ நாகமாதா கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 20 ம் ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கியது. கடந்த, 5ம் தேதி காலை கலசாபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை பொங்கல் விழா கொடியேற்றம் நடந்தது. தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலை தீபாராதனை, பஜனை நடந்தது. தொடர்ந்து நடந்த விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நேற்று முன்தினம் காலை பொங்கல் பூஜையும், அன்னதானமும் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு திருவீதி உலா நடந்தது. பல்வேறு சுவாமிகளின் திருவுருவங்கள் திருவீதி உலா வந்து பக்தர்களை பரவசமடைய செய்தன. தெடர்ந்து, தீபாராதனை முடிந்து வானவேடிக்கை நடந்தது. நேற்று மாலை கொடியிறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன.