/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பால் பேட்மின்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற 'சக்தி'
/
பால் பேட்மின்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற 'சக்தி'
பால் பேட்மின்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற 'சக்தி'
பால் பேட்மின்டன் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற 'சக்தி'
ADDED : பிப் 26, 2025 04:10 AM

கோவை; சத்தியமங்கலத்தில் நடந்த பால் பேட்மின்டன் போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி அணி இரண்டாம் இடம் பிடித்தது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில், 14வது 'சென்டீஸ்' சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. ஆண்களுக்கான பால் பேட்மின்டன் போட்டியில், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த, 18 அணிகள் பங்கேற்றன.
பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணியானது, 35-25, 35-25 என்ற புள்ளி கணக்கில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில் கொங்கு இன்ஜி., கல்லுாரியும், சக்தி இன்ஜி., கல்லுாரி அணியும் மோதியது.
இதில், 35-33, 35-33 என்ற புள்ளி கணக்கில் கொங்கு இன்ஜி., கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது. இரண்டாம் பரிசு வென்ற சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

