/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
/
எஸ்.ஐ., எஸ்.எஸ்.ஐ., கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
ADDED : ஜூலை 30, 2024 01:48 AM
கோவை;கோவை மாநகர போலீசின் எல்லைக்குட்பட்ட, சிங்காநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில், குற்றப்புலனாய்வு பிரிவில், எஸ்.ஐ.,யாக பார்வதி என்பவரும், எஸ்.எஸ்.ஐ.,யாக யூசுப் என்பவரும் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், இவ்விருவர் மீதும் பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், புகாருக்குள்ளான, எஸ்.ஐ., மற்றும் எஸ்.எஸ்.ஐ., இருவரையும், மாநகர காவல் கட்டுப்பட்டறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் மீது எழுந்த புகார் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு, விசாரணையின் முடிவில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.