/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய போட்டி; அவிலா பள்ளி அபாரம்
/
குறுமைய போட்டி; அவிலா பள்ளி அபாரம்
ADDED : ஆக 02, 2024 05:20 AM

கோவை : புறநகர் குறுமைய அளவிலான கேரம், இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ் போட்டியில் அவிலா பள்ளி மாணவியர் பல்வேறு பதக்கங்களை வென்றனர்.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட புறநகர் குறுமைய அளவிலான மாணவியர் இறகுப்பந்து, கேரம் போட்டி எஸ்.பி.ஓ.ஏ., பள்ளியில் நடந்தது.
இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்று 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டியிட்டனர்.
இப்போட்டியில் அவிலா கான்வென்ட் மெட்ரிக்., பள்ளி மாணவியர் அபாரமாக விளையாடி 10க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியர் விவரம்:
டேபிள் டென்னிஸ்: 14 வயது ஒற்றையர் பிரிவில் ஷ்ராவென்யா, இரட்டையர் பிரிவில் ஷ்ராவென்யா, நேஹிதா; 17 வயது இரட்டையர் பிரிவில் கனிஷ்காஸ்ரீ, கிரீஷ்மா; 19 வயது ஒற்றையர் பிரிவில் விசாலாட்சி, இரட்டையர் பிரிவில் விசாலாட்சி, ஜஸ்விகா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இறகுப்பந்து: 14 வயது ஒற்றையர் பிரிவில் ஜூவான் முதலிடம், இரட்டையர் பிரவில் ஜூவான், மகதி இரண்டாமிடம்; 17 வயது ஒற்றையர் பிரிவில் ஹன்சிகா, இரட்டையர் பிரிவில் ஹன்சிகா, ஸ்ரீஹன்சிகா ஆகியோர் முதலிடம்; 19 வயது ஒற்றையர் பிரிவில் சோலை ஸ்ரீ முதலிடம், இரட்டையர் பிரிவில் அனுமிதா, சம்ரிதா இரண்டாம் இடம் பிடித்தனர்.
கேரம்: 14 வயது ஒற்றையர் பிரிவில் மகிமா, இரட்டையர் பிரிவில் மகிமா, சாய் நிலக் ஷா; 17 வயது ஒற்றையர் பிரிவில் பிளாமீனா, இரட்டையர் பிரிவில் பிளாமீனா, ஜிதாஷா; 19 வயது இரட்டையர் பிரிவில் மதுமிதா, மகதி ஆகியோர் முதலிடம் பிடித்து அசத்தினர்.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி முதல்வர் பில்சி, உடற்கல்வி துறையினர் உமா மகேஸ்வரி, பிரியலதா ஆகியோர் பாராட்டினர்.