/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணி அணையில் ஆக., மாதத்தில் 444 மி.மீ., மழை பதிவு
/
சிறுவாணி அணையில் ஆக., மாதத்தில் 444 மி.மீ., மழை பதிவு
சிறுவாணி அணையில் ஆக., மாதத்தில் 444 மி.மீ., மழை பதிவு
சிறுவாணி அணையில் ஆக., மாதத்தில் 444 மி.மீ., மழை பதிவு
ADDED : ஆக 31, 2024 11:26 PM
கோவை;சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 24 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது; 43.39 அடியாக நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கோவை நகர பகுதிக்கு சிறுவாணி நீரே மிக முக்கிய குடிநீர் ஆதாரம். ஜூனில் இருந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. அதனால், நீர் மட்டம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை பகுதியில், 24 மி.மீ., அடிவாரத்தில், 11 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 10.30 கோடி லிட்டர் தண்ணீர் கோவைக்கு எடுக்கப்பட்டது. அணை நீர் மட்டம், 43.39 அடியாக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆக., மாதத்தில் 31 நாட்களில், அணை பகுதியில், 6 நாட்கள் மழைப்பொழிவில்லை. மீதமுள்ள, 25 நாட்களில், 444 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. இதில், ஒன்பது நாட்கள், ஒற்றை இலக்கத்தில் மழை பெய்திருக்கிறது.