/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோவில்களில் ராமநவமி வழிபாடு
/
சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோவில்களில் ராமநவமி வழிபாடு
சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோவில்களில் ராமநவமி வழிபாடு
சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோவில்களில் ராமநவமி வழிபாடு
ADDED : ஏப் 18, 2024 04:20 AM

உடுமலை ஆனந்த சாய் கோவிலில், சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது.
உடுமலை, தில்லை நகர் ஆனந்தசாய் கோவிலில், ராமநவமியையொட்டி கடந்த 15ம் தேதி முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்று காலையில் கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது.
தொடர்ந்து சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. காலை, 11:00 மணிக்கு ராமநாம சங்கீர்த்தனம், விஷ்ணுசகஸ்ரநாமம், சாய் சத்சரித பாராயணம் நடந்தது.
சுவாமிக்கு மதிய ஆரத்தி, மாலை ஆரத்தி, இரவு ஆரத்தி வழிபாடுகள் நடந்தது. நேற்று சீதாராமர் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
கணபதி ேஹாமம், யாகசாலை பூஜை, திருமாங்கல்ய பூஜை நடந்தது. திருமண உற்சவத்துக்கான சீர்வரிசை தட்டுகள் பல்வேறு பொருட்களுடன் வைக்கப்பட்டன. மணமக்களுக்கு திருமண காப்பு கட்டப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு திருமாங்கல்யம் சாற்றப்பட்டது. மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. 'ஜெய் ஸ்ரீராம்' என பக்தர்கள் கோஷமிட்டு, திருமண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.
சிறப்பு அலங்காரத்துடன் திருமண கோலத்தில் சீதாராமர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே, திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், ராமநவமியை முன்னிட்டு, ராமர், சீதைக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தாமரைப்பூ அலங்காரத்தில் சீதா, ராமர், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பொள்ளாச்சி சத்திரம் வீதி சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில், ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராம நவமி ரதோற்சவ விழா கடந்த, 9ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
நேற்றுமுன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று தேரில், சீதா, ராமர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- நிருபர் குழு -

