/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிவானந்த தியான பயிற்சி வகுப்பு
/
சிவானந்த தியான பயிற்சி வகுப்பு
ADDED : ஆக 28, 2024 02:26 AM

பொள்ளாச்சி;சிவன் அருள் என்ற தலைப்பில் ஒருநாள் சிவானந்த தியான பயிற்சி வகுப்பு பொள்ளாச்சி கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது. பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அறிவுறுத்தலின் பேரில் நடந்த பயிற்சி வகுப்பில் அதிகப்படியான மக்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, மகிழ்ச்சியானா வாழ்வை தொடர்வது குறித்து தியான பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், தியானத்தின் வாயிலாக அடையக் கூடிய ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கத்தின் அனுபவங்கள் புதிய சிந்தனை வடிவங்களை உருவாக்கும். எதிர்மறையான போக்குகள் நீங்கி, மனம் மேலும் நிலையானதாகும். தியானம் ஒரு ஆற்றல் மிக்க ஆளுமை, ஆற்றல் வாய்ந்த பேச்சு, அமைதி மற்றும் சிறந்த மன வலிமை ஆகியவற்றை வளர்க்க உதவும் என, தெரிவிக்கப்பட்டது.

