/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் மருத்துவ கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா
/
கற்பகம் மருத்துவ கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா
கற்பகம் மருத்துவ கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா
கற்பகம் மருத்துவ கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா
ADDED : மே 13, 2024 12:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்;ஈச்சனாரியில் உள்ள, கற்பகம் மருத்துவ கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா, பல்கலையில் நடந்தது. மருத்துவ கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
கங்கா மருத்துவமனை இயக்குனர் ராஜசபாபதி பேசுகையில், சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டிய துறை இது. நமது கடினமான நேரங்களிலும், மற்றவர்களிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தனித்திறமை மிக முக்கியம், என்றார்.
தொடர்ந்து, அவர் 149 பேருக்கு பட்ட சான்றிதழை வழங்கினார். கற்பகம் கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் முருகையா, கல்லூரி துணை முதல்வர் நிர்மலா, பேராசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.