/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தினவிழா
/
எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தினவிழா
ADDED : பிப் 27, 2025 11:33 PM

கோவை; எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிறுவனங்களின் நிறுவனர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர்., கலையரங்கில் நடந்த விழாவுக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து, வரவேற்றார்.
விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக டி.வி., நிகழ்ச்சித் தொகுப்பாளர் கோபிநாத், கோவை கே.பி.ஆர்., குழும நிறுவனங்களின் தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, 25 ஆண்டுகள் நிறைவு செய்த டாக்டர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள், 14 பேர் கவுரவிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன. ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி முதல்வர் சவுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.