/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊடுபயிர் சாகுபடியால் மண்ணுக்கு ஊட்டச்சத்து
/
ஊடுபயிர் சாகுபடியால் மண்ணுக்கு ஊட்டச்சத்து
ADDED : மே 24, 2024 10:48 PM
நெகமம் : விவசாயத்தில் ரசாயன உரத்தில் கிடைக்கும் ஊட்டச்சத்தை விட, ஊடுபயிரில் அதிக சத்து கிடைக்கிறது.
கிணத்துக்கடவு மற்றும் நெகமம் பகுதி விவசாயிகள், தங்கள் பயிர்களுக்கு ரசாயன உரங்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் மண் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், உரத்தின் விலையால் விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, தென்னைக்கு ஊடுபயிராக கிளறிசெடியா, முருங்கை, வாழை, எருக்கு போன்றவைகள் வளர்க்கப்படுகிறது. இதில், கிளறிசெடியாவில் இருந்து பொட்டாஸ் மற்றும் நைட்ரஜன் சத்துகள் கிடைக்கிறது. எருக்கில் இருந்து போரான் சத்து கிடைக்கிறது. வாழையில், தென்னைக்கு தேவையான சத்து மிக்க நீர் கிடைப்பதுடன், நோய் தாக்குதலை குறைக்கிறது. முருங்கையில், துத்தநாகம் மற்றும் இரும்பு சத்துகள் கிடைக்கிறது.
ரசாயன உரத்துக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடுவதற்கு பதிலாக, குறைந்த செலவில் இந்த நாற்றுகளை நடவு செய்து வளர்த்தால், கூடுதல் வருவாயுடன், தென்னைக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது, என, விவசாயி சம்பத்குமார் தெரிவித்தார்.

