sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னிந்திய அளவிலான கால்பந்து

/

தென்னிந்திய அளவிலான கால்பந்து

தென்னிந்திய அளவிலான கால்பந்து

தென்னிந்திய அளவிலான கால்பந்து


ADDED : பிப் 24, 2025 12:49 AM

Google News

ADDED : பிப் 24, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியில் பெனால்டி கிக் சுற்றில் பாலக்காடு விக்டோரியா அணி, 9-8 என்ற கோல்களில் புனித தாமஸ் கல்லுாரி அணியை வென்றது.

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியில், 19வது தென்னிந்திய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி கடந்த, 21ம் தேதி துவங்கியது; இன்று நிறைவடைகிறது. ஆண்களுக்கான இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கார்நாடகா மாநிலங்களை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளில், ஏ.ஜே.கே., கல்லுாரி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியையும், விக்டோரியா கல்லுாரி அணி, 6-0 என்ற கோல்களில் எஸ்.ஆர்.எம்.வி., அணியையும், மறுநாள், ரத்தினம் கல்லுாரி அணி, 3-0 என்ற கோல்களில் தேவகிரி அணியையும் வென்றன.

மைனாரிட்டி அணி, 3-1 என்ற கோல்களில் சி.எம்.எஸ்., கல்லுாரி அணியையும், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா அணி, 2-0 என்ற கோல்களில் ஏ.ஜே.கே., அணியையும், ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி அணி, 4-0 என்ற கோல்களில்ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கல்லுாரி அணியை வெற்றி கொண்டது.

புனித தாமஸ் கல்லுாரி அணி, பாலக்காடு விக்டோரியா கல்லுாரி அணி இடையேயான போட்டி, 2-2 என்ற கோல்களில் சமனில் முடிந்தது. பின்னர், பெனால்டி கிக் சுற்றில் பாலக்காடு விக்டோரியா அணி, 9-8 என்ற கோல்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து போட்டிகள் நடந்துவருகின்றன.






      Dinamalar
      Follow us