/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேகத்தடை அமைத்து விபத்து தவிர்க்கணும்; வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நிம்மதி
/
வேகத்தடை அமைத்து விபத்து தவிர்க்கணும்; வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நிம்மதி
வேகத்தடை அமைத்து விபத்து தவிர்க்கணும்; வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நிம்மதி
வேகத்தடை அமைத்து விபத்து தவிர்க்கணும்; வாகன ஓட்டிகளுக்கு கிடைக்கும் நிம்மதி
ADDED : டிச 24, 2024 07:13 AM

கட்டியும் பயனில்லை
மாநகர், எட்டாவது வார்டில், காளப்பட்டி -- விளாங்குறிச்சி சாலையில், நகர்ப்புற சுகாதார மையம் புதிதாக கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் திறக்கப்படவில்லை. இதை திறந்து செயல்படுத்தினால், இப்பகுதி மக்களுக்கு பயனாக இருக்கும்.
--வேலுமணி, காளப்பட்டி.
வேகத்தடை அவசியம்
கோவை மாநகராட்சி, 38வது வார்டு கல்வீரம்பாளையத்திலிருந்து பொம்மனம்பாளையம் செல்லும் சாலையில், எதிரே வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் அதிக விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--சண்முகம், பொம்மனம்பாளையம்.
புகையால் பாதிப்பு
கோவை மாநகராட்சி 12ம் வார்டு உடையாம்பாளையம் வஞ்சியம்மன் நகரில், வஞ்சியம்மன் கோவில் பின்புறமுள்ள காலி இடத்தில், பழைய பேட்டி, பழைய அலுமினியம், காப்பர் ஒயர்களை தீ வைத்து எரிக்கிறார்கள். புகையால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
-ராஜகோபால், உடையாம்பாளையம்.
கால்வாய்க்கு மூடி
சிட்ரா- - காளப்பட்டி ரோடு, நேரு நகரில் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்து, தெற்கே சுமார் 120 அடி துாரத்துக்கு, சாக்கடை கால்வாய்க்கு மூடி இல்லை. இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர், சாக்கடையில் விழ வாய்ப்புள்ளது. திறந்துள்ள பகுதியில் கான்கிரீட் ஸ்லாப் போடுவது அவசியம்.
-- நடராஜன், நேருநகர்.
வழித்தடம் ஆக்கிரமிப்பு
60வது வார்டு தேவேந்திர வீதி பகுதியில், 8 அடி அகலம் கொண்ட கிழமேல் பொது வழித்தடம், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. தற்போது 3 அடி மட்டுமே உள்ளது. பொது வழித்தட ஆக்கிரமிப்புக்கு ஏதுவாக, தனிநபருக்கு உப்பு தண்ணீர் குழாய் அமைத்துத்தரப்பட்டுள்ளது.
--உதயகுமார், தேவேந்திர வீதி.