/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலையில் விளையாட்டு போட்டி; டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் பள்ளி வெற்றி
/
பாரதியார் பல்கலையில் விளையாட்டு போட்டி; டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் பள்ளி வெற்றி
பாரதியார் பல்கலையில் விளையாட்டு போட்டி; டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் பள்ளி வெற்றி
பாரதியார் பல்கலையில் விளையாட்டு போட்டி; டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் பள்ளி வெற்றி
ADDED : ஆக 15, 2024 11:55 PM

கோவை : பாரதியார் பல்கலையில் நடந்த விளையாட்டு போட்டியில் டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் பள்ளி வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட அளவிலான குறுமையப் போட்டிகள் பாரதியார் பல்கலையில் நடைபெற்றது. இப்போட்டிகளில் கோவை சாய்பாபா காலனியில் உள்ள டி.ஏ., ராமலிங்கம் செட்டியார் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கு பெற்று ஹாக்கி, கால்பந்து, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றனர்.
மாணவர்களுக்கான 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் ஹாக்கி இறுதிப் போட்டியிலும், கபடி 19 வயதுக்கு உட்பட்டோர் இறுதிப் போட்டியிலும், பால் பேட்மிட்டன் 19 வயதுக்கு உட்பட்டோர் இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றனர். பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் ரன்னராக வந்தனர்.
மாணவிகளுக்கான ஹேண்ட்பால் இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றனர். 14, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரன்னராக வந்தனர். கால்பந்து இறுதிப்போட்டியில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெற்றி பெற்றனர். 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ரன்னராக வந்தனர். ஹாக்கி இறுதி போட்டியில் 14, 17 ,19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும், கபடி போட்டியில் 14, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் ரன்னராகவும் வந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் டாக்டர் அங்கப்பன் வாழ்த்துகளை தெரிவித்தார். பள்ளியின் செயலர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவர் பிரகாஷ் செல்வம் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில,் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ராதாமணி, தலைமை ஆசிரியர் ராதாமணி, உடற்கல்வி ஆசிரியர் சங்கர் கணேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.