/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிழக்கு குறுமைய தடகள போட்டி செயின்ட் ஜோசப், கன்யா குருகுலம் வெற்றி
/
கிழக்கு குறுமைய தடகள போட்டி செயின்ட் ஜோசப், கன்யா குருகுலம் வெற்றி
கிழக்கு குறுமைய தடகள போட்டி செயின்ட் ஜோசப், கன்யா குருகுலம் வெற்றி
கிழக்கு குறுமைய தடகள போட்டி செயின்ட் ஜோசப், கன்யா குருகுலம் வெற்றி
ADDED : ஆக 14, 2024 08:59 PM

கோவை : கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, கிழக்கு குறுமைய பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டியில், செயின்ட் ஜோசப் மற்றும் பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி அணிகள் முதலிடம் பிடித்தன.
கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், கே.கே நாயுடு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தடகளப்போட்டிகள் ஆக., 12, 13 ஆகிய தேதிகளில், நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டன.
இதில் மாணவ - மாணவியருக்கு, 100மீ., 200மீ., 400மீ.,, 800மீ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன. கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டிகளின் முடிவில், மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற செயின்ட் ஜோசப் மெட்ரிக்., பள்ளி அணி, மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி தலைமையாசிரியர் சசிகுமார் பரிசுகளை வழங்கினார்.
கே.கே. நாயுடு பள்ளி தலைமையாசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.