/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போட்டிகள் நடத்த ஸ்டேடியம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
/
போட்டிகள் நடத்த ஸ்டேடியம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
போட்டிகள் நடத்த ஸ்டேடியம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
போட்டிகள் நடத்த ஸ்டேடியம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
ADDED : ஜூன் 26, 2024 10:50 PM
கோவை: விளையாட்டு போட்டிகள் நடத்தவும், நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி மேற்கொள்ள உறுப்பினராகவும், ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருக்கும் ஒரே ஸ்டேடியம், நேரு ஸ்டேடியம் மட்டும் தான். இங்கு, சிறுவர், சிறுமியர், வீரர் வீராங்கனைகள் என, தினமும் ஆயிரக்கணக்கானோர் பயிற்சி மேற்கொள்கின்றனர். கோவை மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லுாரிகள், தனியார் கிளப்புகள், அமைப்புகள் சார்பில், தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நேரு ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்த, போட்டி ஒருங்கிணைப்பாளர்கள், நேரு ஸ்டேடியத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரில் அணுகி, கட்டணம் செலுத்தி 'புக்கிங்' செய்யும் நடைமுறை இருந்தது. தற்போது இது, ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்தவும், உறுப்பினராக சேர்ந்து பயிற்சி மேற்கொள்ளவும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று, கணக்கு துவங்க வேண்டும். பின்னர், ஆன்லைன் சேவை என்பதை தேர்வு செய்து, ஸ்டேடியம் மற்றும் உறுப்பினர்கள் முன்பதிவு மேற்கொள்ளலாம்.