/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில கூடைப்பந்து போட்டி; கோவை மாவட்டம் முதலிடம்
/
மாநில கூடைப்பந்து போட்டி; கோவை மாவட்டம் முதலிடம்
ADDED : மே 02, 2024 11:56 PM
கோவை:திருச்சியில் நடந்த மாநில அளவிலான ஜூனியர் கூடைப்பந்து பெண்கள் பிரிவில், கோவை மாவட்ட அணி முதலிடத்தை பிடித்தது.
தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், திருச்சி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவிலான, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் கூடைப்பந்து போட்டி, திருச்சி, கொங்குநாடு இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், சென்னை, கோவை, துாத்துக்குடி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில், கோவை மாவட்ட அணி, 77--38 என்ற புள்ளிக்கணக்கில் துாத்துக்குடி அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது. மூன்றாமிடத்துக்கான போட்டியில் சென்னை அணி, சேலம் மாவட்ட அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற மாணவியருக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பரிசாக வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக விளையாடிய மாணவியர், தேசிய போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர்.