/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில செஸ் போட்டி கோவை மாணவர் சாம்பியன்
/
மாநில செஸ் போட்டி கோவை மாணவர் சாம்பியன்
ADDED : மே 09, 2024 04:32 AM

கோவை : விருதுநகர் மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவர் சாம்பியன் பட்டம் வென்றார்.
தமிழ்நாடு செஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான போட்டி அருப்புக்கோட்டை சேது தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 224 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதன், 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கோவை ஆர்.எஸ் புரம் பாரதீய வித்யா பவன் பள்ளியின் 10ம் வகுப்பு மாணவர் நந்திஷ் ஒன்பது சுற்றுகளில் 8 புள்ளிகள் எடுத்து சாம்பியன் பட்டம் வென்றார். அவரை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் இரண்டாமிடத்தை பிடித்தார்.
வெற்றி பெற்ற மாணவர் நந்திஷ் தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவரை கோவை மாவட்ட செஸ் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், பெற்றோர் பாராட்டினர்.