/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில செஸ் போட்டிவரும், 27ல் துவக்கம்
/
மாநில செஸ் போட்டிவரும், 27ல் துவக்கம்
ADDED : மே 15, 2024 12:53 AM
கோவை;மாநில அளவிலான ஒபன் செஸ் போட்டி வரும், 27ம் தேதி துவங்கி 31ம் தேதி நிறைவடைகிறது.
தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில் 74வது தமிழ்நாடு மாநில ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், நவ இந்தியா இந்துஸ்தான் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மட்டுமே தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர். மாநில போட்டியில் பங்கேற்க www.chessfee.com, www.signinchess.com, www.circlechess.com, www.easypaychess.com ஆகிய இணைய தளங்களை பயன்படுத்தி, மே, 23ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கம், லேப்டாப் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தவிர பல்வேறு வயது பிரிவுகளில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

