ADDED : ஆக 06, 2024 06:59 AM
கோவை: கோவையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள், தொண்டாமுத்துார் ரோடு ஓனாப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லுாரியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் தனித்திறன், ஒற்றை கம்பு, குழு போட்டி (தரநிலைத் தேர்வு) மற்றும் உலக அளவிலான போட்டிக்கு, மாணவர் தேர்வு நடைபெற்றது.
தனித்திறன் போட்டியில் பங்குபெறும் மாணவர்களுக்கு, கோப்பை மற்றும் சான்றிதழ், 20 மாணவர்களுக்கு மேல் அழைத்து வரும் ஆசான்களுக்கு குழு கோப்பை, குழு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் குழு கோப்பை வழங்கப்படுகிறது.
போட்டியில் கலந்து கொண்ட ஆசான்கள், வீர பீஷ்மர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில், 600 மாணவர்கள், 23க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்டனர்.
போட்டியை, கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன், சென்னை ஜேப்பியார் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் அன்புசிவா ஆகியோர் துவக்கி வைத்தனர்.