/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான சிலம்பம்; மாணவர்கள் அமர்க்களம்
/
மாநில அளவிலான சிலம்பம்; மாணவர்கள் அமர்க்களம்
ADDED : ஜூலை 24, 2024 11:49 PM
கோவை : கற்பகம் பல்கலையில் நடந்த மாநில அளவிலான சிலம்ப போட்டியில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம், கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில், 21வது தமிழ்நாடு மாநில சிலம்ப போட்டி கற்பகம் பல்கலை வளாகத்தில் நடந்தது.
போட்டியை கோவை மாநகர் போலீஸ் தெற்கு துணை கமிஷனர் சரவணகுமார் துவக்கி வைத்தார். பர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் நிறுவன தலைவர் ஜான் சிங்கராயர், கற்பகம் பல்கலை பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இப்போட்டியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். குத்துவரிசை, கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு வீச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், கோவை மாவட்ட அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. கோவை அணி சார்பில் பங்கேற்ற, இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் - வீராங்கனைகள் 37 தங்கம், 20 வெள்ளி, 41 வெண்கலம் என 98 பதக்கங்கள் வென்று அசத்தினர்.