/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா
/
மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா
ADDED : ஜூலை 05, 2024 02:37 AM
கோவை:கோவை, சொக்கம்புதுார் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு விழா, தனித்திறன் செயல்பாட்டு துவக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிகளின் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகிய நான்கு இல்லங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் முன்னாள் மாணவி, நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி (சட்டம்) அபர்ணா சமூக சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார். என்சிசி குழும தலைமையகத்தின் நிர்வாக அதிகாரி சுவாமி, மாணவர்களின் வாழ்க்கையில் ஒழுக்கம், தலைமைப் பண்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.