/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைக்கு எதிரான மராத்தான் ஓட்டம் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வம்
/
போதைக்கு எதிரான மராத்தான் ஓட்டம் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வம்
போதைக்கு எதிரான மராத்தான் ஓட்டம் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வம்
போதைக்கு எதிரான மராத்தான் ஓட்டம் மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வம்
ADDED : செப் 09, 2024 01:34 AM

கோவை, செப். 9-
சி.பி.எஸ்.இ., பள்ளிகளை உள்ளடக்கிய கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில், 'போதைக்கு எதிரான' விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் நேற்று நடந்தது.
இதில், 56 பள்ளிகளை சேர்ந்த, 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருடன், 100க்கும் மேற்பட்ட பெற்றோரும் பங்கேற்றனர்.
போலீஸ் துணை கமிஷனர்(தெற்கு) சரவணகுமார் மற்றும் கே.ஜி.ஐ.எஸ்.எல்., நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் மராத்தானை துவக்கி வைத்தனர். இதில், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 5 கி.மீ., நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து, 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 4 கி.மீ., மற்றும், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, 3 கி.மீ., ஓட்டமும் நடந்தது. நேரு ஸ்டேடியம் எதிரே துவங்கிய மராத்தானில், பெற்றோர், போலீசார் ஆர்வமுடன் ஓடினர்.
போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் துவக்கிவைத்து பேசுகையில், ''இளம் தலைமுறையினர் போதைக்கு அடிமையாகாமல் இருந்து, குடும்பங்களை பாதுகாக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.
மராத்தான் ஓட்டமானது ஏ.டி.டி., காலனி, மகளிர் பாலிடெக்னிக்கல்லுாரி, அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியம் அடைந்தது. நிறைவில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல், 10 பேருக்கு பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கூட்டமைப்பு சேர்மன் நவமணி, தலைவர் சுகுணா தேவி, துணை தலைவர் மார்ட்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.