நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி;பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி மாணவர்கள், கோவை வேளாண் பல்கலைக்கு மாணவர்கள் களப்பயணம் சென்றனர்.
பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரி மாணவர்கள், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, தொழில் துவக்கு மையம் இன்குபேசன் சென்டரை சென்று பார்வையிட்டனர்.
அதில், வேளாண் வணிக வளர்ச்சி, புதுமையான பல்வேறு தொழில்கள், அதற்கான திட்டங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து வேளாண் பல்கலை தலைமை நிர்வாக அதிகாரி ஞானசம்பந்தம் விளக்கம் அளித்தார்.

