/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.சி.சி.,க்கு மாணவர்கள் தேர்வு
/
என்.சி.சி.,க்கு மாணவர்கள் தேர்வு
ADDED : ஆக 03, 2024 05:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பூசாரிப்பட்டியில் உள்ள, பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படைக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் முகாம் நடந்தது. இதில், இந்திய ராணுவப் படை ஹவில்தார் கருத்தபாண்டி மற்றும் நைப் சுபேதார் முரளி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு, தகுதியான மாணவர்களை தேர்வு செய்தனர்.
மொத்தம், 97 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில், தேசிய மாணவர் படைக்கு, 30 பேர் தேர்வாகினர். இவர்களை, கல்லுாரி செயலாளர் அருள்மொழி, தாளாளர் மகேந்திரன், கல்வி சார் தாளாளர் சிவானிகிருத்திகா, முதல்வர் கண்ணன் ஆகியோர் வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை, தேசிய மாணவர் படை அலுவலர் பவித்ரா செய்திருந்தார்.