/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நீட்' தேர்வில் சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு
/
'நீட்' தேர்வில் சாதித்த மாணவர்கள் கவுரவிப்பு
ADDED : ஜூன் 10, 2024 01:52 AM

கோவை;'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் வகையில், அலன் பயிற்சி நிறுவனம் சார்பில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
கோவையில் செயல்பட்டு வரும், அலன் கரியர் இன்ஸ்டிட்யூட்டில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜே.இ.இ., - நீட் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்தாண்டு நடந்த நீட் தேர்வில், இங்கு பயின்ற மாணவர்கள் அகில இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில், கோவை பயிற்சி மையத்தில் பயின்ற, 51 மாணவர்கள் 600க்கும் மேல் பெற்றுள்ளனர். விஷால் பழனிசாமி 705, ஷ்ரவ்யா 698, கவுரிசங்கர் 690 மதிப்பெண்கள் பெற்று அசத்தினர். 600க்கும் மேல் எடுத்த மாணவர்களை கவுரவிக்கும் வகையில், காந்திபுரத்தில் உள்ள அலன் இன்ஸ்டிட்யூட்டில் விழா நடந்தது.
அலன் இன்ஸ்டிடியூட் கோவை மற்றும் புதுச்சேரி தலைவர் சவுரப் திவாரி தலைமையில் நடந்த விழாவில் கேக் வெட்டி, மாணவர்களுக்கு சால்வை, பதக்கம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டது. அலன் கோவை வளாக தலைவர் வைபவ் திவாரி உடனிருந்தார்.
விழாவில் கோவை, புதுச்சேரி தலைவர் சவுரப் திவாரி பேசுகையில், ''அலன் கோவையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டுமுயற்சியால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்,'' என்றார்.
மேலும், சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு, 96060 71654 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.

