/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் சாதித்து காண்பித்த மாணவ, மாணவியர்
/
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் சாதித்து காண்பித்த மாணவ, மாணவியர்
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் சாதித்து காண்பித்த மாணவ, மாணவியர்
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு ரிசல்ட் சாதித்து காண்பித்த மாணவ, மாணவியர்
ADDED : மே 14, 2024 01:38 AM
கோவை:கோவை மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நேஷனல் மாடல் பள்ளி
ஹோப் காலேஜ் அருகே உள்ள நேஷனல் மாடல் பள்ளியில், பொதுத் தேர்வு எழுதிய 136 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி தீக் ஷிகா 500க்கு 493 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். பயாலஜியில் ஒருவர், உளவியலில் இருவர், வேதியியலில் இருவர் என 5 மாணவர்கள் சென்டம் அடித்துள்ளனர்.
அதேபோல, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 118 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி மோனிகா 500க்கு, 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். கணிதத்தில் 6 பேர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கேம்போர்டு பள்ளி
மணியகாரன் பாளையத்தில் உள்ள கேம்போர்டு பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 66 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர் கோகுல் ராதாகிருஷ்ணன் 500க்கு 487 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். பயலாஜியில் சென்டமும் அடித்துள்ளார். பொலிடிக்கல் சயின்சில் ஒருவர், உளவியலில் ஒருவர், புவியியலில் ஒருவர், கமர்ஷியல் ஆர்ட்சில் ஒருவர், கணினி அறிவியலில் இருவர் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய 84 மாணவர்களும், தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி பிரனிகா 500க்கு 486 மதிப்பெண் பெற்று முதலிடம்பிடித்துள்ளார்.
தமிழில் ஒருவர் மற்றும் கணிதத்தில் இருவர் என, 3 மாணவர்கள் சென்டம் அடித்துள்ளனர்.
சந்திரகாந்தி பப்ளிக் பள்ளி
கொடிசியா, டெக்ஸ் பார்க் சாலையில் உள்ள சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 37 மாணவர்களும், தேர்ச்சி அடைந்துள்ளனர். 36 மாணவர்கள் 75 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாணவர் ஹரிஹரன் யுவராஜ், 500க்கு 483 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 44 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி வந்தனா, 500க்கு 492 மதிப்பெண் பெற்றுள்ளார்.
பிரெஞ்ச் பாடத்தில் 3 பேரும், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸில் 5 பேரும், உடற்கல்வி பாடத்தில் ஒரு மாணவரும், சென்டம் அடித்துள்ளனர்.
ஆலாங்கொம்பு எஸ்.எஸ்.வி.எம்.,பள்ளி
மேட்டுப்பாளையம், ஆலாங்கொம்பில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 323 மாணவர்களும், தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர் விகாஸ் சவுத்ரி 500க்கு 489 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். கணினி அறிவியலில் ஒரு மாணவரும், பயாலஜியில் 3 பேரும், கணிதத்தில் ஒருவரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இதே பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 247 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர் யுதிஸ்குமார் 500க்கு 493 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழில்6 பேரும், பிரெஞ்சில் 2 பேரும், கணிதத்தில் 6 பேரும், சமூக அறிவியலில் ஒருவரும் சென்டம் பெற்றுள்ளனர்.
வெள்ளலுார் எஸ்.எஸ்.வி.எம்.,பள்ளி
வெள்ளலூரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 153 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி ஸ்மிருத்தி, 500க்கு 490 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். வேதியியலில் ஒருவரும், கணினி அறிவியலில் 3 பேரும், பிசினஸ் ஸ்டடிஸில் 2 மாணவர்களும் சென்டம் அடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 180 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவி அனுஸ்ரீ 500க்கு 486 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். கணிதத்தில் 3 பேரும், தமிழில் 4 பேரும், பிரெஞ்ச் பாடத்தில் 3 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர் 483 மதிப்பெண் பெற்றுள்ளார், பயாலஜி மற்றும் வேதியியலில் 2 மாணவர்கள் சென்டம் அடித்துள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய, 60 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் 484 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளி
சாய்பாபா காலனியில் உள்ள அங்கப்பா சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 9 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவி பிரியதர்ஷினி 500க்கு 455 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 42 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கவுண்டம்பாளையத்தில் உள்ள அங்கப்பா அகாடமி பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வித்யா நிகேதன் பள்ளி
விளாங்குறிச்சியில் உள்ள வித்யா நிகேதன் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய, 20 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர் சந்தோஷ் 500க்கு 489 மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்துள்ளார். 3 மாணவர்கள் தமிழில் சென்டம் அடித்துள்ளனர்.

