/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனவிலங்குகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளதா என ஆய்வு
/
வனவிலங்குகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளதா என ஆய்வு
வனவிலங்குகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளதா என ஆய்வு
வனவிலங்குகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள் உள்ளதா என ஆய்வு
ADDED : மே 17, 2024 11:17 PM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, வனவிலங்குகளுக்கு இடையூறாக மின்கம்பங்கள், மின்பாதை செல்கிறதா என, வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில், மின்ஒயர்களில் அடிபட்டு வனவிலங்குகள் உயிரிழப்பு சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சமீபத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த போது, தாழ்வாக இருந்த மின்கம்பி உரசியதில் யானை இறந்தது.
இதையடுத்து, வன எல்லையையொட்டி உள்ள கிராமங்களில், ஆய்வு செய்து, மின்கம்பங்கள் தாழ்வாக இருந்தால் உயரமாக அமைக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு புளியங்கண்டி பகுதியில், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மின்கம்பங்கள் உயரமாக உள்ளதா என்றும், மின்பாதை யானை மீது படும் வகையில் உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், 'வனவிலங்குகள் செல்லும் பகுதியில், இடையூறாக, டிரான்ஸ்பார்மர்கள்,மின்கம்பங்கள் உள்ளதா, மின்பாதை ஏதாவது தாழ்வாக உள்ளதா என பார்வையிடப்பட்டது. அதுபோன்று இருந்தால் மாற்றி அமைக்கும் வகையில் கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஆனைமலை, அங்கலகுறிச்சி, ஒடையகுளம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் மின்சாரம் தாக்கி இறப்பதை தடுக்கும் வகையில் இந்த கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது,' என்றனர்.

