/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல் பாலம் அகற்றப்பட்டதால் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
/
கல் பாலம் அகற்றப்பட்டதால் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
கல் பாலம் அகற்றப்பட்டதால் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
கல் பாலம் அகற்றப்பட்டதால் தடுமாறும் வாகன ஓட்டுநர்கள்
ADDED : மே 24, 2024 10:41 PM

கிணத்துக்கடவு, - கிணத்துக்கடவு, மார்க்கெட் முன்பாக உள்ள கால்வாய், மழை நீரில் மூழ்கியதால் வாகன ஓட்டுநர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் நாள்தோறும் ஏராளமான விவசாயிகள், தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய கொண்டு வருகின்றனர். மார்க்கெட் ரோட்டின் முன் கால்வாய் உள்ளது. இவ்வழியில் வாகனங்கள் செல்ல கால்வாய் மீது கற்கள் வைத்து பாலம் போன்று அமைக்கப்பட்டது.
இதில், இரண்டு கற்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவு அகற்றும் பணிக்காக அகற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்த கற்கள் கால்வாய் மீது பதிக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டுனர்கள் தடுமாறி சென்று வந்தனர்.
இதில், நேற்று கனமழை பெய்த போது, இந்த கால்வாய் பாலத்தின் மீது அதிக அளவு மழை நீர் சென்றதால், கற்கள் பார்வைக்கு தெரியவில்லை. இதனால், கற்கள் உள்ள இடம் தெரியவில்லை. வாகன ஓட்டுனர்கள் தடுமாறி சென்றனர்.
எனவே, மார்க்கெட் வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி, இந்த இடத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

