/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணிவகுப்பில் அசத்திய மாணவியர்; பி.காம்., சி.ஏ., துறை 'சாம்பியன்ஷிப்'
/
அணிவகுப்பில் அசத்திய மாணவியர்; பி.காம்., சி.ஏ., துறை 'சாம்பியன்ஷிப்'
அணிவகுப்பில் அசத்திய மாணவியர்; பி.காம்., சி.ஏ., துறை 'சாம்பியன்ஷிப்'
அணிவகுப்பில் அசத்திய மாணவியர்; பி.காம்., சி.ஏ., துறை 'சாம்பியன்ஷிப்'
ADDED : மார் 13, 2025 11:48 PM

கோவை; அவினாசிலிங்கம் பல்கலையில் நடந்த விளையாட்டு விழாவில் பி.காம்., சி.ஏ., துறை ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
அவினாசிலிங்கம் மகளிர் பல்கலையில் விளையாட்டு விழா நேற்று நடந்தது. பல்கலை மைதானத்தில் நடந்த விழாவுக்கு, மாணவியர் நலன் டீன் வாசுகி தலைமை வகித்தார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி போட்டிகளை துவக்கிவைத்தார். தொடர்ந்து, 950 மாணவியர் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது. சிலம்பம் மற்றும் கம்பு நடனம், சேலையை கொண்டு நிகழ்த்தும் நடனம், கூர்நுனிக்கோபுரம் போன்றவை நன்கு பயிற்சி பெற்ற மாணவியரால் நிகழ்த்தப்பட்டது. இதில், 42 துறைகளின் மாணவியர் பங்கேற்ற அணிவகுப்பு போட்டியில், உளவியல் துறை மாணவியர் வெற்றி பெற்றனர். ஓட்டம், நீளம் தாண்டுதல் என, துறைகளுக்கு இடையேயான போட்டிகளில், 30 அணிகள் பங்கேற்றன. ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பி.காம்., சி.ஏ., துறை வென்றது.
விளையாட்டு போட்டிகளில் அதிகம் பங்கேற்ற துறைக்கான விருதினை தகவல் தொழில்நுட்பத்துறை பெற்றது. வெற்றி பெற்ற மாணவியருக்கு, விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி பரிசுகள் வழங்கினார். உடற்கல்வித் துறை இயக்குனர் நந்தினி, துறைத்தலைவர் வனிதாமணி, பேராசிரியர் சரவணப்பிரபா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.