/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
/
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்
ADDED : மே 10, 2024 11:26 PM
கோவை:கோவை மகளிர் கோர்ட் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் நந்தினிதேவி. இவர், கோவையில் புதிதாக திறக்கப்பட்ட எஸ்.சி., - எஸ்.டி., வழக்கு சிறப்பு கோர்ட்டிற்கு, கடந்த நவம்பரில் மாற்றப்பட்டார்.
பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டுப்பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை, கோவை மகளிர் கோர்ட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக நடந்து வருகிறது.
இந்த வழக்கில், சாட்சி விசாரணை முடிந்த நிலையில், புலன் விசாரணை அதிகாரிகளிடம் மட்டும் சாட்சியம் பெற வேண்டியிருக்கிறது. அவர்களிடம் விசாரிக்கப்பட்டு இன்னும் ஒரு சில மாதங்களில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆரம்ப கட்டத்திலிருந்து, நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
இதனால், எஸ்.சி., - எஸ்.டி., கோர்ட்டிற்கு மாற்றம் செய்யப்பட்ட பிறகும், கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, கூட்டுபாலியல் பலாத்கார வழக்கை, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி வந்தார்.
தற்போது நந்தினிதேவி சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய நீதிபதியாக, ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால், கூட்டு பாலியல் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்படுவதில், மேலும் கால தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.