ADDED : ஜூலை 19, 2026 06:12 PM
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட, 8 வது வார்டு பகுதியில் புதிய சாலை பணிகள் துவக்கப்பட்டு, இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் சிவராஜன் கூறுகையில், ‘எனது வார்டில் டெண்டர் வைக்கப்பட்டு கடந்த, 5 மாதங்களுக்கு முன்பு சாலை பணிகள் துவக்கப்பட்டன. பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பணிகளை உடனடியாக முடிக்க வலியுறுத்தினேன். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றார்.
