ADDED : ஜூலை 25, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை : வால்பாறை தாசில்தாராக சிவக்குமார் நேற்று பொறுப்பேற்றார்.
வால்பாறை தாசில்தாராக இருந்த வாசுதேவன், மேட்டுபாளையம் தாசில்தாராக பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக, ஆனைமலை தாசில்தார் சிவக்குமார், வால்பாறை தாசில்தாராக மாற்றப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். புதியதாக பொறுப்பேற்ற தாசில்தாருக்கு, வருவாய்த்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

