/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அரசு செட்டாப் பாக்ஸ்களுக்கு இடையூறு செய்தால் நடவடிக்கை' ஆய்வு கூட்டத்தில் தாசில்தார் எச்சரிக்கை

ADDED : பிப் 21, 2025 11:04 PM

பொள்ளாச்சி; 'அரசு செட்டாப் பாக்ஸ்கள் மற்றும் சிக்னல்களை இடையூறு செய்ய முற்படும் ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பொள்ளாச்சியில் நடந்த கேபிள் ஆப்ரேட்டர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் தாசில்தார் தெரிவித்தார்.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், தமிழக அரசு கேபிள் நிறுவன, உள்ளூர் கேபிள் ஆப்ரேட்டர்களின் ஆய்வு கூட்டம் நடந்தது. தனி தாசில்தார் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தொழில்நுட்ப அலுவலர் ஷாஜகான், பொள்ளாச்சி வட்ட அரசு கேபிள் பொறுப்பாளர் உமர் பாரூக் முன்னிலை வகித்தனர்.
தாசில்தார் பேசியதாவது: தமிழகத்தில், 50 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை செயலாக்கம் செய்யும் இலக்கை நோக்கி பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை அரசு செட்டாப் பாக்ஸ் பெறாத ஆப்ரேட்டர்கள் உடனடியாக, 'எச்டி' மற்றும், 'எஸ்டி' பாக்ஸ்கள் பெற்று செயலாக்கம் செய்து, கடைக்கோடி கிராமம் வரை குறைந்த கட்டணத்தில் அரசு சிக்னல் வழங்க வேண்டும்.
அரசு நலவாரிய உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்டங்களால் ஆப்ரேட்டர்கள் பயனடைய வேண்டும். மேலும், ஆப்ரேட்டர்களுக்கு அரசு கடனுதவி வழங்க உள்ளது.
அரசு பாக்ஸ்கள் மற்றும் சிக்னல்களை இடையூறு செய்ய முற்படும் ஆப்ரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பாக்ஸ்கள் செயலாக்கம் செய்யாத பகுதிகளில், புதிதாக விண்ணப்பம் பெற்று உரிமம் வழங்கப்படும்.
இவ்வாறு, பேசினார்.
இக்கூட்டத்தில், அரசு கேபிள் அலுவலர்கள், உள்ளூர் ஆப்ரேட்டர்கள் பங்கேற்றனர்.