/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசின் விருது
/
கோவை மாநகராட்சிக்கு தமிழக அரசின் விருது
ADDED : ஆக 15, 2024 05:32 AM

கோவை : தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான விருது, கோவை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் சிறந்த மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.
இதில், சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. இரண்டாவது இடத்தை துாத்துக்குடி மாநகராட்சி பிடித்துள்ளது.
முதலிடத்தை பிடித்த கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்விருதை வழங்க உள்ளார்.
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில்,''குப்பை மேலாண்மை, வரிவசூல், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும், விருதுக்காக கருத்தில் கொள்ளப்பட்டன. இதில் சிறப்பாக பணியாற்றியதன் அடிப்படையில், இவ்விருது வழங்கப்படுகிறது. தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.