/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கம் விற்பனை செய்து ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பு
/
தங்கம் விற்பனை செய்து ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பு
ADDED : மார் 07, 2025 07:10 AM

கோவை : தங்கம் விற்பனை செய்து ரூ.6.53 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட நகைக்கடை பங்குதாரரை ஜி.எஸ்.டி., அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
கோவை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரக தலைமையக தடுப்பு அலகு அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள மொத்த, சில்லரை விற்பனை செய்யும் தங்க நகைக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.ஜி.எஸ்.டி., உடன் கூடிய விற்பனை பில்களின்றி ரகசியமாக கிலோக்கணக்கில் தங்கம், தங்கநகைகள் விற்பனை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் பிப்., 1 முதல், பிப்., 21 ம் தேதி வரை சோதனை நடத்தப்பட்டது.
பொள்ளாச்சி நகைக்கடை ஒன்றில் ஊழியர்கள், பங்குதாரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், ஜி.எஸ்.டி., உடன் கூடிய, பில்கள் தயாரிக்க ஒரு மென்பொருள் மற்றும் ஜி.எஸ்.டி., இன்றி பில்கள் தயாரிக்க மற்றொரு மென்பொருள் என, இரு மென்பொருள்களை பயன்படுத்தியது தெரிந்தது.
இதன் வாயிலாக நிறுவனம், 305 கிலோ தங்கத்தை ஜி.எஸ்.டி., செலுத்தாமல் விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து நிறுவனம் மீது, ரூ.217 கோடிக்கான ஜி.எஸ்.டி., வரியான, ரூ6.53 கோடியை ஏய்ப்பு செய்ததாக வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து நிறுவனத்தின் பங்குதாரரை நேற்று கைது செய்த ஜி.எஸ்.டி., அதிகாரிகள் அவரை சிறையில் அடைத்தனர்.