/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு; கற்பித்தல் பணி பாதிப்பு
/
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு; கற்பித்தல் பணி பாதிப்பு
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு; கற்பித்தல் பணி பாதிப்பு
ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு; கற்பித்தல் பணி பாதிப்பு
ADDED : பிப் 25, 2025 11:54 PM
அன்னுார்; 'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தால், அன்னுார் வட்டாரத்தில் கற்பித்தல் பாதிக்கப்பட்டது.
பல லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் - அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 'ஜாக்டோ ஜியோ' 25ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை அறிவித்தது.
இதன்படி அன்னுார் வட்டாரத்தில், 75 துவக்கப் பள்ளிகள், 16 நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும், 257 ஆசிரியர்களில் 235 பேர் பணிக்கு வரவில்லை. மாணவர்கள் கற்றல் பாதிக்காமல் இருக்க கல்வி அலுவலர்கள் தன்னார்வலர்களை பள்ளிகளுக்கு அனுப்பினர். எனினும் 100 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற விகிதத்திலேயே ஆசிரியர்கள் இருந்தனர்.
இதனால் பெரும்பாலான பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் எதுவும் நடைபெறவில்லை.
இதேபோல், அன்னுார் தாலுகா அலுவலகத்தில், துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட 72 பேரில், 34 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 30 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை. 21 ஊராட்சி செயலர்களில் ஏழு பேர் பணிக்கு வரவில்லை.
இதனால் ஒன்றிய, ஊராட்சி அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.

