/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
44 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிக ரத்து
/
44 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிக ரத்து
ADDED : மே 13, 2024 12:25 AM

கோவை;கோவையிலுள்ள 1,323 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. 44 வாகனங்கள் விதிமுறைகள் கடைபிடிக்காததால், அவற்றின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
போலீஸ் பயிற்சிபள்ளி மைதானத்தில், தனியார் பள்ளி வாகனங்களை போலீஸ், வருவாய், கல்வி,போக்குவரத்து ஆகிய நான்கு துறை அதிகாரிகள் இணைந்து கூட்டாய்வு செய்தனர்.
இதற்கு கலெக்டர் கிராந்தி குமார் தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர் ரோகித்நாதன் ராஜகோபால், மாவட்ட கல்வி அலுவலர் புனிதா, போக்குவரத்துதுறை இணை கமிஷனர் சிவக்குமரன், ஆர்.டி.ஓ.,க்கள் சிவகுருநாதன், ஆனந்த், பாலமுருகன், சத்தியகுமார் உடனிருந்தனர்.
கலெக்டர் கிராந்திகுமார் கூறியதாவது:
தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012ன்படி, கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்கள் மோட்டார் வாகன விதிகளுக்குட்பட்டு 20 விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
இதில் 203 பள்ளிகளை சேர்ந்த, 1323 பஸ்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.
விதிமுறைகளை சரியாக பின்பற்றப்படாத, 44 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. அவை மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆய்வின் நிறைவில், டிரைவர்களுக்கு முதலுதவி பயிற்சி, தீயணைப்பான்களை பயன்படுத்தும் நடைமுறை, கண்பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.