/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஜவுளித்தொழில் வளர்ச்சி திட்டம்; புதிய எம்.பி., மீது எதிர்பார்ப்பு'
/
'ஜவுளித்தொழில் வளர்ச்சி திட்டம்; புதிய எம்.பி., மீது எதிர்பார்ப்பு'
'ஜவுளித்தொழில் வளர்ச்சி திட்டம்; புதிய எம்.பி., மீது எதிர்பார்ப்பு'
'ஜவுளித்தொழில் வளர்ச்சி திட்டம்; புதிய எம்.பி., மீது எதிர்பார்ப்பு'
ADDED : ஏப் 05, 2024 10:57 PM
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் விசைத்தறி காடா துணி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. பல்வேறு பிரச்னைகள் காரணமாக, கடந்த காலங்களில், இத்தொழில் பின்னடைவை சந்தித்துள்ளது.
அண்டை மாநிலங்களுடன் போட்டி போட முடியாமலும், ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது. இவ்வாறு, ஜவுளி உற்பத்தி சார்ந்த இத்துறையை கோவை எம்.பி., நடராஜன் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஜவுளி தொழில் துறையினர் கூறுகையில், 'மின் கட்டண உயர்வு, பஞ்சு - நுால் விலை ஏற்ற இறக்கங்கள், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், தொழில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மத்திய - மாநில அரசுகளுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோவை எம்.பி., நடராஜன் ஜவுளித்தொழில் துறை குறித்து சிறிதும் சிந்திக்கவில்லை. கடந்த காலத்தில் நடந்த பார்லிமென்ட் கூட்டத் தொடரில், மூன்று முறை மட்டுமே ஜவுளித்தொழில் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதிலும், ஒருமுறை மட்டுமே பருத்தி - பஞ்சு விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பேசி உள்ளார். மற்றபடி, ஜவுளி தொழில் துறை வளர்ச்சி பெறுவதற்கான எந்த முயற்சியும் அவர் மேற்கொள்ளவில்லை. எனவே, எதிர்வரும் ஆட்சியில், ஜவுளி தொழிலின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வருபவர்களே கோவை தொகுதி எம்.பி.,யாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.

