/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஐந்து நாட்களுக்கு வரும் மழை : சொல்கிறது வேளாண் பல்கலை
/
ஐந்து நாட்களுக்கு வரும் மழை : சொல்கிறது வேளாண் பல்கலை
ஐந்து நாட்களுக்கு வரும் மழை : சொல்கிறது வேளாண் பல்கலை
ஐந்து நாட்களுக்கு வரும் மழை : சொல்கிறது வேளாண் பல்கலை
ADDED : ஜூலை 20, 2024 11:51 PM
கோவை:கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல், மிதமான மழை பெய்யும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி, இன்று, 45 மி.மீ., நாளை, 25 மி.மீ., 23மற்றும் 24ல் 20 மி.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சம் பகல் நேர வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் இரவு நேரம், 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
காற்றின் ஈரப்பதம், காலை நேரம் 90 சதவீதமாகவும், மாலை நேரம் 84 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக மணிக்கு காற்றின் வேகம் 20-30 கி.மி., வேகத்தில் வீசக்கூடும். பெரும்பாலும் காற்று, தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.
மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள பகுதிகளில், கனமழை எதிர்பார்க்கப்படுவதால், விவசாயிகள் போதிய வடிகால் வசதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்படும் மழையை பயன்படுத்தி, வரும் பருவத்தில் நிலக்கடலை விதைக்க ஏதுவாக நிலத்தை தயார்படுத்தலாம். காற்றின் வேகம் அதிகம் எதிர்பார்க்கப்படுவதால், கரும்பு, வாழைக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.