/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால பணியை விரைந்து முடிக்கணும்! பொதுமக்கள் வலியுறுத்தல்
/
மேம்பால பணியை விரைந்து முடிக்கணும்! பொதுமக்கள் வலியுறுத்தல்
மேம்பால பணியை விரைந்து முடிக்கணும்! பொதுமக்கள் வலியுறுத்தல்
மேம்பால பணியை விரைந்து முடிக்கணும்! பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : செப் 06, 2024 02:53 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் வழியாக பெத்தநாயக்கனுார், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த ரோட்டில், பாலாறு குறுக்கிடுவதால், தரை மட்ட பாலம், வாகன ஓட்டுநர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டது. மழை காலங்களில், பாலம் மூழ்கிவிடுவதால், வாகன போக்குவரத்து தடைபட்டது. மாற்று வழித்தடத்தில் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இவ்வழியாக செல்லும் மக்கள், பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டினால் பயனாக இருக்கும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், நபார்டு திட்டத்தில், ஜமீன் கோட்டாம்பட்டி - கெங்கம்பாளையம் ரோட்டில், 6.72 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடக்கின்றன.
அதில், 8.500 மீ., உயரம் உடையதாகவும், 148.8 மீட்டர் நீளம் கொண்ட பாலத்தின் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் செல்ல அதே பகுதியில், மாற்று வழித்தடம் உருவாக்கப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'பருவமழை காலம் என்பதால் தற்போது பாலாற்றில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனால், இவ்வழியாக செல்ல முடியாத சூழல் உள்ளது.
எனவே, இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் பயனாக இருக்கும். அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்,' என்றனர்.