/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உயர் கோபுர கடிகாரம் வேலை செய்யவில்லை; பயணியர் தவிப்பு
/
உயர் கோபுர கடிகாரம் வேலை செய்யவில்லை; பயணியர் தவிப்பு
உயர் கோபுர கடிகாரம் வேலை செய்யவில்லை; பயணியர் தவிப்பு
உயர் கோபுர கடிகாரம் வேலை செய்யவில்லை; பயணியர் தவிப்பு
ADDED : ஆக 04, 2024 10:25 PM

ரோட்டில் தேங்கிய மழைநீர்
காட்டம்பட்டி, தாசநாயக்கன்பாளையத்தில் இருந்து பல்லடம் செல்லும் ரோட்டில் ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். இந்த ரோடு பள்ளம் போன்று உள்ளதால், அளவு கடந்த மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் இவ்வழியில் செல்லும் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, தேங்கிய மழைநீரை அகற்றி ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- - ஜெயகோபால், தாசநாயக்கன்பாளையம்.
ஒன்றிய அலுவலகத்தில் புதர்
கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கட்டடத்தின் அருகாமையில் ஆங்காங்கே செடிகள் முளைத்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் பூச்சிகள் அதிக அளவில் அலுவலகத்தில் வர அதிக வாய்ப்புள்ளது. எனவே, புதர்களை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
- - ராஜ்குமார், கிணத்துக்கடவு.
விபத்து அபாயம்
பொள்ளாச்சி - கோவை ரோடு சேரன்நகர் பகுதியில் வேகத்தடை உள்ளது. மேலும், இதே பகுதியல் டிவைடரும் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதி அடைந்து பயணிக்கின்றனர். எனவே, மக்கள் நலன் கருதி வேகத்தடை அல்லது டிவைடர் எதாவது ஒன்றை நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகற்றம் செய்ய வேண்டும்.
- - விஸ்வநாதன், பொள்ளாச்சி.
கடிகாரம் பழுது
பொள்ளாச்சி, புதிய பஸ் ஸ்டாண்டு பகுதியில் உள்ள உயர் கோபுர கடிகாரம் முறையாக வேலை செய்யவில்லை. இதனால் ஏராளமான பயணியர் நேரம் தெரியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பயணியர் நலன் கருதி கடிகாரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -வஞ்சி, பொள்ளாச்சி.
துார் வார வேண்டும்
உடுமலை - பழநி ரோடு, கழுத்தறுத்தான் பள்ளத்தில் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் செடிகள், கழிவுகள் அகற்றப்படாததால் தேங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வடிகாலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், உடுமலை.
சிதிலமடைந்த மூடிகள்
உடுமலை, கங்காதரன் லே -அவுட் பகுதியில் பாதாளச்சாக்கடை குழிகளின் மூடிகள் இருக்கும் இடங்கள் சிதிலமடைந்து உள்வாங்கி இருக்கின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அந்த பள்ளங்களில் சிக்கி தடுமாறுகின்றனர். இரவு நேரங்களில் அதிகமான விபத்துகளும் நடக்கின்றன.
- ராஜேந்திரன், உடுமலை.
சுரங்கப்பாதையில் ரோடு சேதம்
உடுமலை, காந்திசவுக் மேம்பால சுரங்கப்பாதையில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. அப்பகுதியில் வெளிச்சமும் குறைவாக உள்ளது. மழைநீர் தேங்கி இருக்கும் நாட்களில் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தொலைதுாரம் சுற்றி வர வேண்டியுள்ளது.
- வெங்கடேஷ், உடுமலை.
பராமரிப்பு இல்லை
உடுமலை ஸ்ரீ நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாததால், குப்பை, நிறைந்து காணப்படுகிறது. இதனால், குழந்தைகள் விளையாட தயக்கம் காட்டுகின்றனர். எனவே, பூங்காவை பராமரித்து சுத்தப்படுத்த வேண்டும்.
- சுந்தர், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, யூனியன் அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இல்லை. பொதுமக்கள் மழை நாட்களில் பஸ் ஸ்டாப்பில் காத்திருக்க முடியாமல் வணிக கடைகளின் முன் நிற்க வேண்டியுள்ளது. இதனால் பஸ்களை கவனிக்க முடியாமல் தவற விடுகின்றனர்.
- அகிலா, உடுமலை.
குப்பைக்கு தீ வைப்பு
உடுமலை, அரசு கலைக்கல்லுாரி ரோட்டோரம் முழுவதும் பிளாஸ்டிக் குப்பைக்கழிவுகளாக கொட்டுகின்றனர். கழிவுகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் புகை பரவுவது வாகன ஓட்டுநர்களுக்கு சுவாச பிரச்னையை ஏற்படுத்துகிறது. அவ்வழியாக செல்லும் கல்லுாரி மாணவர்களுக்கும், உடல்நலத்தை பாதிக்கும் வகையில் புகை பரவுகிறது.
- தாரணி, மலையாண்டிபட்டிணம்.
ரோட்டோர குப்பை
பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ரோட்டின் ஓரத்தில் பிளாஸ்டிக் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அங்கு பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் நலன் கருதி துாய்மை பணியாளர்கள் இதை கவனித்து குப்பையை விரைவில் அகற்றம் செய்ய வேண்டும்.
- - ஜெயச்சந்திரன், பொள்ளாச்சி.